மது அருந்திவிட்டு அதிகாலையில் வாந்தி, மயக்கம் வந்தால் அதனை மட்டும் செய்யாதீர்கள்! உயிருக்கே ஆபத்து!

மது அருந்திவிட்டு அதிகாலையில் வாந்தி, மயக்கம் வந்தால் அதனை மட்டும் செய்யாதீர்கள்! உயிருக்கே ஆபத்து!


avoid-drinking-alcohol

 

தற்போதைய வாழ்க்கைமுறையில் அதிகப்படியானோருக்கு மது மற்றும் புகைப்பழக்கம் உள்ளது. தமிழகத்தில் மதுவினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மது மற்றும் புகை பழக்கத்தினால், பலருக்கு இளம் வயதிலேயே நோய்கள் வருகின்றது. தற்போதைய காலத்தில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருப்பவர்களுக்கே ஏராளமான நோய்கள் தாக்குகின்றன. இந்த நிலையில் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் மது, புகை பழக்கத்தை கற்றுக்கொண்டால் மரணம் எளிதில் வந்துவிடும். எனவே இந்த பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

drink

ஒரு சிலர் அதிகப்படியாக மது அருந்திவிட்டு, அடுத்தநாள் காலை வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனைக்கு செல்வார்கள்.  ஆனால் அவர்கள் மருத்துவனை செல்வதற்கு முன்பு அவர்களுக்கு சிலர் முட்டாள்தனமான அறிவுரைகளை வழங்குவார்கள். 

முதல்நாள் அதிகப்படியான  மது அருந்திவிட்டு மறுநாள் காலை வாந்தி, மயக்கத்துடன் இருப்பவர்களிடம், மீண்டும் மறுமுறை மது அருந்துங்கள் எல்லாம் சரி ஆகிவிடும் என்று கூறுவார்கள். அது முற்றிலும் தவறான அறிவுரை.  அவ்வாறு செய்தால் உங்கள் உயிருக்கே ஆபத்து நேரிடும். மதுப்பழக்கத்தினால் உங்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடையாது.  எனவே உங்கள் குடும்பத்தை மனதில் கொண்டு உடனே இந்த தீய பழக்கத்தை விட்டுவிடுங்கள்.  இதனை மற்றவர்களுக்கும் பகிர்ந்து மற்றவர்களின் குடும்பத்தை காப்பதற்கு உதவுவோம்.