லைப் ஸ்டைல் சமூகம்

கள்ளக்காதல் உருவாக என்னவெல்லாம் காரணமாக இருக்கும்? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்

Summary:

afraid of illegal affairs

இன்றைய இணையதள உலகத்தில் கள்ளக்காதல் என்பது மிகவும் எளிதாக அரங்கேறி வருகின்றது. தனிக்குடும்பத்தில் இருக்கும் கணவன் மனைவிகளுக்கு கண்டிப்பாக தன துணை மேல் ஒரு சிறிய சந்தேகமாவது வரும்.

அதுவும் சென்னை குன்றத்தூர் அபிராமி செய்த கொடூர செயலுக்கு பின்னால் அனைத்து கணவன்மார்களுக்கும் தன் மனைவியை தனியாக வீட்டில் விட்டு செல்வதில் ஒரு தயக்கம் வருகிறது. 

Promodini - A Tragic Story Of Lonely Young Beautiful Bengali House Wife

அப்படியே பார்த்தாலும் வீட்டில் தனியாக இருக்கும் எல்லா பெண்களும் இந்த மாதிரியான கள்ளக்காதலில் விழுவதில்லை. இதை போன்ற சம்பவங்கள் பெரும்பாலும் தன் கணவன் மனைவி இருக்கும் உறவில் இடைவெளி உண்டாவதால் தான். 

எப்பொழுதும் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசி நெருக்கமாக இருக்கும் எந்த ஒரு கணவனோ மனைவியோ பிறர் துணையை அதிகமாக எதிர்பார்ப்பதில்லை. எனவே கணவன் மனைவிக்கு இடையே பெரிய இடைவெளி ஏற்படாமல் பார்த்து கொள்வது சிறந்தது.

பொதுவாக திருமணமான சில வருடங்கள் கவண் மனைவி இருவரும் நெருக்கமாகவே இருக்கிறார்கள். எனவே அந்த காலகட்டத்தில் இந்த மாதிரியான கள்ளக்காதல் பற்றிய உணர்வுகள் வருவதில்லை. பின் எப்போது தான் இதற்கான எண்ணங்கள் தோன்றுகின்றன?

திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு பெரும்பாலும் ஆண்கள் குடும்ப பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தன் தொழிலிலும், வேலையிலும் அதிக கவனத்தை செலுத்த ஆரம்பித்து விடுகின்றனர். தன் மனைவி, குழந்தைகளோடு நேரம் செலவிடுவதை குறைத்து விடுகின்றனர். அதனால் அவர்களுக்கு குடும்பத்தின் மீது பாசம் குறைந்து விடுகின்றது என்று அர்த்தமில்லை. அவர்கள் கஷ்டப்பட்டு உழைப்பதே தன் குடும்பத்தை சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று தான்.

இந்த இடைவெளியில் தான் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தன் மனதிலும் உணர்வுகளிலும் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் சூழ்நிலையில் தான் இதைப்போன்ற கள்ளகாதல்கள் பெரும்பாலும் ஏற்படுகின்றன. 

இதைப்போன்ற கள்ளக்காதல் ஏற்பட பெண்கள் மட்டும் தான் காரணமா என்றால், கண்டிப்பாக கிடையாது.

பொதுவாகவே பெண்கள் கொஞ்சம் கூச்ச சுபாவமும், மனதில் ஒரு வித அச்சத்தோடும் தான் இருப்பார்கள். ஆனால் எப்போது தமக்கு பக்கபலமாக ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் மனதில் ஆழமாக பதிகின்றதோ, அந்த சமயத்தில் துணிச்சலோடு எதையும் செய்யும் அளவிற்கு இறங்கி விடுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை தான் பெரும்பாலான ஆண்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். 

இன்றைய சமூக வலைதள உலகத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்வது மிகவும் சுலபமாகிவிட்டது. அதிலும் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் விளையாட்டாக தொடங்கும் ஒரு சில வேலைகள் தான் மிக பெரிய சிக்கல்களுக்கு காரணமாகி விடுகின்றன.

ஒரு பெண் மனதில் இருக்கும் வெற்றிடத்தை தெரிந்தகொள்ளும் எந்த ஒரு ஆணுக்கும் அவளை தன் வலையில் விழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடும். அவளை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்ற நோக்கத்தில் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

இவ்வாறு ஆண்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கும் பெண்கள் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். அவர்களுக்கும் தங்களது தேவைகளை நிறைவேற்றிகொள்ளும் சந்தர்ப்பமாக கருத தொடங்கி விடுகின்றனர். இப்படி தான் கள்ளகாதல்கள் பெரும்பாலும் தொடங்குகின்றன.

சென்னை குன்றத்தூர் அபிராமியின் கள்ளக்காதல் போல் வெளியில் தெறிந்தவைகள் சில மட்டுமே. ஆனால் வெளியில் தெரியாமல் எத்தனையோ காலாகாதல்கள் நாளுக்கு நாள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன. 

தனது கள்ளக்காதல் வெளியில் தெரிய வரும் போது தான் அதனை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் விபரீத முடிவில் இறங்கிவிடுகின்றனர் பெண்கள். இதைபோன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப்படுவது என்னவோ ஆண்களை விட பெண்கள் தான்.

Indian Joint Family

இதனை தடுக்க சிறந்த வழி, நாம் கூட்டு குடும்பமாக வாழ்வது தான். ஆம், இதுபோன்ற சம்பவம் தற்போது அதிகப்படியாக தனிக்குடும்பத்தில் வசிப்பவர் மத்தியில் தான்  நிகழ்கிறது.  கூட்டு குடும்பத்தில் இது போன்று நடப்பது குறைவு.  திருமணம் ஆன உடனே வீட்டில் உள்ள பெரியவர்களை ஒதுக்கிவைத்து விடுகின்றனர். ஆனால் ஒவ்வொரு வீட்டிற்கும் பெரியவர்கள் தேவை என்பதை மறந்துவிடுகின்றனர்.

குடும்பத்தில் பெரியவர்கள் வீட்டில் இருப்பது, ராணுவத்தைவிட பெரும் பாதுகாப்பு. அதுமட்டுமில்லாமல் எது நல்லது, எது கெட்டது என்பதை எடுத்து கூறுவதற்கு வீட்டில் பெரியவர்கள் இருப்பது மிகவும் அவசியம். வீட்டில் பெரியவர்கள் இருப்பது அனைவருக்கும் கொடுத்து வைக்கவேண்டிய விஷயம். எனவே யாரும் வீட்டில் உள்ள பெரியவர்களை ஒதுக்கி வைக்காதீர்கள். அப்படி செய்தால் பாதிப்பு என்னவோ உங்களுக்கு தான்.


Advertisement