என்னது....மாலை 6 மணிக்கு மேல் இவற்றை செய்தால் நம் உடலுக்கு ஆபத்தா..?activities-that-should-not-be-done-after-6-pm

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நம் உடல் என்னும் அழகிய கூட்டிற்குள் தான் அற்புதமான மனம் குடி கொண்டுள்ளது. நம் மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

அதாவது நம் உடல் எடைக்கு கலோரி மட்டுமே காரணம் அல்ல மேலும் நம் உடலில் இருக்கும் கொழுப்பு கூட நம் உடல் எடைக்கு ஒருவித காரணமாகும். உடல் எடையை குறைப்பதற்கும், நிம்மதியாக உறங்குவதற்கும் சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

Health life

இதன்படி முதலாவதாக காபி மற்றும் காபி அடிப்படையிலான பானங்களை குடிப்பதை நாம் தவிர்க்க வேண்டும். இரண்டாவதாக சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் பழங்கள் உட்கொண்டால் நம் செரிமானத்தை தடுத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால் பழங்களை தவிர்க்க வேண்டும்.

மூன்றாவதாக இரவு உணவு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இரவு உணவின்போது அதிகமாக சாப்பிடுவது நம் உடலில் கலோரியை அதிகரித்து விடும். இது உடல் எடை குறைப்பதில் சிக்கலை ஏற்படுத்தி விடும். நான்காவதாக மாவு  அடிப்படையிலான உணவுகளை இரவு நேரத்தில் முக்கியமாக தவிர்க்க வேண்டும்.

ஐந்தாவதாக இரவு நேரங்களில் சிறு தீனி விரும்பி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் இருக்கும் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உடலில் கொழுப்பாக தங்கிவிடும். இதனால் தூக்கம் பாதிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்க கூடும். இவை அனைத்தும் மாலை 6 மணிக்கு மேல் நாம் செய்யக்கூடாத செயல்கள் ஆகும்.