குக்கரில் இருந்து வெளியே வரும் நீரை எப்படி தடுப்பது?! இல்லத்தரசிகளுக்கு ஒரு அட்டகாசமான டிப்ஸ்..!



a-solution-to-stop-water-from-coming-out-of-the-cooker

இப்போது இருக்கும் பரபரப்பான சூழலில், விரைவாக சமைக்க வேண்டும் என்பதற்காக பலரும் குக்கரை பயன்படுத்துகிறார்கள். ஏனெனில், குக்கரில் சமைத்தால் சமையல் வேலை விரைவில் முடிந்து விடும். ஆனால், குக்கரை சரியாக பராமரிக்கவில்லை என்றால் குக்கரை சுற்றி நீர் வெளியே வரும். அதனை சுத்தம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும்.

மேலும், குக்கர் மூடியில் மட்டுமல்லாமல், அடுப்பு, சுவர் என அனைத்து இடங்களிலும் அந்த நீர் சிந்தி கரையாக மாறும். அதை சுத்தம் செய்வது இரட்டிப்பு வேலையாக இருக்கும். ஆகையால், குக்கரை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் குக்கர் மூடியின் இரப்பர் தளர்வாக இருந்தால் கூட இந்த பிரச்சனை வரும். ஆகையால், சமைத்து முடித்ததும் இரப்பரை எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு விடுங்கள்.

cooker

அப்படி, மிகவும் தளர்வாக இருந்தால் அந்த இரப்பரை மாற்றி விட்டு புதிதாக இரப்பர் வாங்கி பயன்படுத்துங்கள். அதுமட்டுமல்லாமல் ஒரே குக்கரை பல வருடங்களாக பயன்படுத்தினாலும் இந்த நீர் வெளியேறும் பிரச்சனை வரும். ஆகையால், குக்கரை சுத்தமாக வைத்து பயன்படுத்துங்கள்.

இதையும் படிங்க: சூடான சோறுக்கு ஏற்ற., சுவையான வெண்டைக்காய் துவையல் செய்வது எப்படி?

குக்கரில் இருந்து வெளியே வரும் நீர் வராமல் இருக்க ஒரு சொட்டு எண்ணெய் போதும். குக்கரில் நீங்கள் என்ன சமைத்தாலும் ஒரு சொட்டு எண்ணெய் விடுங்கள். அதுமட்டுமல்லாமல், குக்கர் மூடியை சுற்றியும் எண்ணெய் தடவி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் குக்கரில் இருந்து அதிகமாக வெளியேறும் நீரை வராமல் தடுக்கலாம்.

இதையும் படிங்க: குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க.. புத்திசாலியாக மாற இதை செய்யுங்கள்.!