அம்மாடியோவ்.. ஐந்தாவது மாடியில் இருந்து குதித்தும் ஒன்றும் ஆகளையே.. பார்வையாளர்களை பதறவைத்த நாய்.!

அம்மாடியோவ்.. ஐந்தாவது மாடியில் இருந்து குதித்தும் ஒன்றும் ஆகளையே.. பார்வையாளர்களை பதறவைத்த நாய்.!


a Dog Scary Stunt Went to 5th Floor and Jump around Safely 

 

நாய்களுக்கு இயற்கையாகவே எலும்பு ஸ்திரத்தன்மை அதிகம். இத்தகவல் ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டது. அதனால் தான் அவ்வப்போது வாகனங்களில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கும் நாய்கள், நொடியில் எழுந்து ஓடி தப்பிக்கின்றன. 

அவற்றின் பிடியில் சிக்கும் மனிதன் கை-கால்களை உடைத்துக்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்நிலையில், நாய் ஒன்று கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தில் இருந்து குதித்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. 

கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் ஐந்தாவது தளத்தில் இருந்து, நாய் ஒன்று சாவகாசமாக மேல் தளத்திற்கு சென்று பின் மீண்டும் கீழே குதிக்கிறது. குதித்த வேகத்தில் அப்படியே எழுந்து நடந்து செல்கிறது. இதனை வீடியோ எடுத்தவர் வியப்புடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

ஹாலிவுட்டில் ஜாக்கி சான் நடித்த திரைப்படங்களில், அடுக்குமாடி குடியிருப்பில் கட்டிடம் விட்டு கட்டிடம் தாவி ஜாக்கி வித்தை காண்பிப்பார். சாதுர்யமாக மேல் தளங்களில் இருந்து கீழே இறங்குவார். அதனைப்போல, நாயும் தனது விதையை காண்பித்து இருக்கிறது.