அரசியல் இந்தியா

ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை! அதிர்ச்சியில் தேர்தல் ஆணையம்!

Summary:

Zero polling in election booth


இன்று இந்தியாவின் 17 வது மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. நேற்று ஆந்திர மாநிலம், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிஹார், சத்தீஸ்கார், ஜம்மு காஷ்மீர், மகாராஸ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிஸா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடைபெற்றது.

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரையிலும் நடைபெற்றது. இதற்கிடையே, ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பங்கேற்கக் கூடாது என மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். இதனால், மாவோயிஸ்ட்கள் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் ஒடிசா மாநிலத்தின் மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Advertisement