சினம் கொண்டு நீருக்குள் சீரும் நாக பாம்பு.. கிணற்றுக்குள் குதித்து இளைஞர் செய்த காரியம்.. வைரல் வீடியோ..

கிணற்றுக்குள் மிதந்த நாக பாம்பு ஒன்றை இளைஞர்கள் சிலர் மீட்கும் வீடியோ காட்சி இணையத்தில் வை


Youngsters rescue snake from well viral video

கிணற்றுக்குள் மிதந்த நாக பாம்பு ஒன்றை இளைஞர்கள் சிலர் மீட்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு முக்கிய காரணம் பாம்பின் கொடிய விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்ற பயமும்தான் காரணம். அதிலும் நாக பாம்பு என்றால் சொல்லவே தேவை இல்லை. சற்று கூடுதல் பயம் தொற்றிக்கொள்ளும்.

இந்நிலையில் கிணறு ஒன்றுக்குள் மிகவும் ஆக்ரோஷமாக நீந்தித்திரியும் நாக பாம்பு ஒன்றை இளைஞர்கள் சிலர் மீட்டுள்ளனர். முதலில் இளைஞர் ஒருவர் கிணற்றுக்குள் குதித்து, அந்த பாம்பை திசை திருப்பிக்கிறார். பின்னர் மற்றொரு இளைஞர் கிணற்றின் பக்கவாட்டில் உள்ள கைப்பிடி ஒன்றை பிடித்துக்கொண்டு, தனக்கு நேராக வரும் பாம்பை சிறிதும் அச்சமின்று வாலை பிடித்து தூக்குகிறார்.

பின்னர் மற்றொருவர் வந்து அந்த பாம்பை கிணற்றுக்குள் இருந்து வெளியே எடுத்து, அதை நிலப்பரப்பில் விடுகிறார். இந்த காட்சி முழுவதும் வீடியோவாக வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.