இந்தியா

முதல் திருமணநாளை கொண்டாட காத்திருந்த கணவனுக்கு வந்த அதிர்ச்சி செய்தி! சோகத்தில் மூழ்கிய குடும்பம்

Summary:

முதல் திருமண நாளை கொண்டாட பெற்றோர் வீட்டில் இருந்து கணவன் வீட்டிற்கு காரில் சென்ற இளம் பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல் திருமண நாளை கொண்டாட பெற்றோர் வீட்டில் இருந்து கணவன் வீட்டிற்கு காரில் சென்ற இளம் பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுதீஷ் - அஞ்சு (26) தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் முடிந்த நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு முதல் திருமண நாள் வந்துள்ளது. அஞ்சு கடந்த சில நாட்களாக தனது பெற்றோர் வீட்டில் வசித்துவந்தநிலையில் தனது முதல் திருமண நாளை கொண்டாட கணவன் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதனிடையே திருமண நாள் கொண்டாட்டங்களை கணவர் சுதீஷ் ஏற்பாடு செய்துவைத்துள்ளார். இந்நிலையில் தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் கணவர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார் அஞ்சு. கார் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது கார் மோதியதில் அஞ்சு சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் மூவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர். இதனிடையே மனைவி இன்னும் வரவில்லையே என காத்துக்கொண்டிருந்த சுதிஷீக்கு போலீசார் போன் செய்து அஞ்சு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு அவர் கதறி அழுதுள்ளார். திருமண நாளை கொண்டாட ஆசையாக வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement