இந்தியா

ஓடும் ரயிலில் 24 வயது இளம் பெண் செய்த காரியம்... கதறித்துடித்த தாய்.. அதிர்ச்சியில் மூழ்கிய சகபயணிகள்

Summary:

ஓடும் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓடும் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் இருந்து சிவமொக்காவுக்கு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ஜன சதாப்தி ரெயில் புறப்பட்டது. இந்நிலையியல் அந்த ரயில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சிவமொக்கா பழைய ரயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கும் இடையே உள்ள துங்கா ஆற்றின் பாலத்தில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த இளம் பெண் ஒருவர் திடீரென ரயிலில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சகபயணிகள் உடனே ரயிலை நிறுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து அந்த பெண்ணின் தாயார் கதறி துடித்தபடி இதுகுறித்து ரயில்வே போலீசாரிடம் முறையிட்டுள்ளார். ரயில்வே போலீசார் உடனடியாக தீயணைப்பு வீரர்கள், நீச்சல் வீரர்கள் ஆகிருடன் அந்த பெண் குதித்த இடத்திற்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றுமாலை 6 மணிவரை தேடியும் அந்த பெண் கிடைக்கவில்லை. இதனை அடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ரயிலில் இருந்து குதித்த அந்த பெண்ணின் பெயர் சஹானா(24) என்பதும், பெங்களூருவை சேர்ந்த அவர் ஆடிட்டர் தேர்வுக்கு படித்துவந்தநிலையில் வரும் 22 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆடிட்டர் தேர்வு எழுத்துவதற்காகத்தான் அவர் பெங்களூருவில் இருந்து தனது தாய் சுஜாதாவுடன் ரெயிலில் சிவமொக்காவுக்கு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த பெண் ரயிலில் இருந்து குதித்தபோது அந்த பெண்ணின் தாய் கழிவறையிக்கு சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த பெண் ஏன் ரயிலில் இருந்து குதித்தார்? தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement