15 நாளைக்கு ஒரு கணவன்! 3 மாதங்களில் 3 கணவர்கள்! இளமையை வைத்து இளம் பெண் செய்த அதிர்ச்சி காரியம்
15 நாளைக்கு ஒரு கணவன்! 3 மாதங்களில் 3 கணவர்கள்! இளமையை வைத்து இளம் பெண் செய்த அதிர்ச்சி காரியம்

மஹாராஷ்டிராவில் மூன்று மாதத்தில் மூன்று ஆண்களை திருமணம் செய்து, அவர்களிடம் இருந்து பணம், நகைகளை கொள்ளையடித்துச்சென்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளன்னர்.
மஹாராஷ்டிரா மாநிலம் ஒளரங்கப்பத்தை சேர்ந்தவர் 27 வயதான பெண் விஜயா அம்ருதா. இவருக்கும் நாசிகை சேர்ந்த யோகேஷ் எனபவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து 15 நாட்கள் யோகேஷுடன் தங்கியிருந்த விஜயா அம்ருதா அவரிடம் இருந்த பணம், நகை, உடமைகளை கொள்ளையடித்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
திருமணம் என்ற பெயரில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த யோகேஷ் இதுகுறித்து காவல் நிலையில் புகார் கொடுத்துள்ளார். யோகேஷ் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் அந்த பெண்ணை தீவிர தேடுதலுக்கு பிறகு கைது செய்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கும் நிலையில், கொரோனா ஊரடங்கால் அவருக்கும் அவரது கணவருக்கும் வேலை இல்லாததாலும், பொருளாதார நெருக்கடி காரணமாகவும் திருமணம் என்ற பெயரில் யோகேஷை ஏமாற்றி அவரிடம் பணம், நகை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், யோகேஷ் போன்றே மேலும் இரண்டு ஆண்களை திருமணம் என்ற பெயரில் அந்த பெண் ஏமாறியுள்ளார். சந்தீப் தராட் என்ற நபரையும் திருமணம் செய்து அவருடன் சில நாட்கள் இருந்துவிட்டு பின்னர் அவரிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
மேலும், சில நாட்கள் கழித்து மஹாராஷ்டிராவை சேர்ந்த மற்றொருவரையும் இதேபோல் ஏமாற்றி உடமைகளை எடுத்து சென்றுள்ளார் அந்த பெண். தற்போது அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.