இந்தியா

இளம் பெண்ணை ஓடும் ரயிலுக்கு அடியில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற இளைஞர்.! பதற வைத்த சம்பவம்.!

Summary:

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம் பெண்ணை ஓடும் ரயிலுக்கு அடியில் தள்ளிவிட்டு கொல்ல முயற்சி.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம் பெண்ணை இளைஞன் ஒருவன், ஓடும் ரயிலுக்கு அடியில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளான். அப்போது அருகில் இருந்த நபர்கள் இச்சம்பவத்தை தடுக்க முயன்றுள்ளனர்.

ஆனால் அந்த இளைஞன் அந்த பெண்ணை ரயிலில் தள்ள முயன்றபோது அப்பெண்ணுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இளம் பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கு நடந்த சம்பவம் ரயில்நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த கேமரா பதிவில், நடைபாதையில் தடுமாறி விழுந்த இளம் பெண்ணை, அந்த இளைஞர் தண்டவாளம் மீது இழுத்துச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 24 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் இளம் பெண்ணை, சக ஊழியரான இளைஞரே கொலை செய்ய முயன்றுள்ளார். அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி, அப்பெண் மறுத்ததால் அந்த இளைஞன் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது.


Advertisement