போதை படுத்தும் பாடு... மொத்த குடும்பத்தையும் படுகொலை செய்த இளைஞர்.! அவர் சொன்ன அதிர்ச்சி காரணம்.!

போதை படுத்தும் பாடு... மொத்த குடும்பத்தையும் படுகொலை செய்த இளைஞர்.! அவர் சொன்ன அதிர்ச்சி காரணம்.!


young man killed his all family members


டெல்லியில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தனது மொத்த குடும்பத்தையும் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாடுமுழுவதும் தற்போது போதைக்கு அடிமை ஆகுபவர்களின் எண்னிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், டெல்லியின் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ் (25). போதைக்கு அடிமையான இவர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதுதொடர்பாக அவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதையடுத்து அவரை மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். அங்கிருந்து சில நாட்களுக்கு முன்பு தான் கேசவ் வீட்டுக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் நேற்று இரவும் கேசவ் தனது குடும்பத்தினருடன் மீண்டு தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த கேசவ்  தனது தந்தை உள்பட குடும்பத்தினர் 4 பேரையும் குத்திக்கொலை செய்துள்ளார்.

அவரது வீட்டில் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, கேசவ்வின் குடும்பத்தினர் அனைவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தப்பியோடிய கேசவை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீசார்  நடத்திய முதற்கட்ட விசாரணையில், போதையில் இருந்த கேசவ் மேலும் மது வாங்க பணம் கேட்டுள்ளார். குடும்பத்தினர் மறுத்ததால் அவர்களை படுகொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து கொலை செய்யப்பட்ட நான்கு பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குற்றவாளி கேசவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.