மெட்ரோ ரயில்நிலைய உச்சியில் இருந்து இளம்பெண் தற்கொலை.! நொடிப்பொழுதில் நடந்த ஆச்சரியம்., இறுதியில் பரிதாபம்..! வைரல் வீடியோ

மெட்ரோ ரயில்நிலைய உச்சியில் இருந்து இளம்பெண் தற்கொலை.! நொடிப்பொழுதில் நடந்த ஆச்சரியம்., இறுதியில் பரிதாபம்..! வைரல் வீடியோ


young-girl-tryed-suicide-attempt-in-metro-station

டெல்லி அக்ஷர்தாம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் 25 வயதாகும் இளம்பெண் ஒருவர் மெட்ரோ ரயில் நிலையத்தின் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு ஏறி, அங்கிருந்து கீழே குதிக்க முயன்றுகொண்டிருந்தார். இதனைப்பார்த்த பொதுமக்கள் அலறல் சத்தம் போட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த சில நிமிடங்களில் அந்த இளம்பெண்ணை காப்பாற்றுவதற்கு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள் உடனடியா சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மொட்டை மாடியின் விளிம்பில் இருந்த பெண்ணைக் கவனித்த CISF வீரர்கள் அந்தப் பெண்ணை பின்வாங்கும்படி வற்புறுத்தினர்.

ஆனால் அந்த இளம்பெண் அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்காமல் சில நிமிடங்களில் கீழே குதித்துவிட்டார். ஆனால் கீழே அவர் விழுந்த இடத்தில் CISF மற்றும் மெட்ரோ ஊழியர்கள் போர்வைகளை பயன்படுத்தி அப்பெண்ணை தரையில் விழாமல் காப்பாற்றிவிட்டனர். ஆனாலும், அவருக்கு பெரிய அளவிலான வெளிக்காயம் ஏற்படவில்லை என்றாலும், உட்காயங்கள் ஏற்பட்டு எலும்புகள் முறிந்தது. 

அதனைத்தொடர்ந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பெண்மணி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு 8.45 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.