வெளிநாட்டில் இருந்து ஊருக்குத் திரும்பிய தந்தைக்கு, காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!

வெளிநாட்டில் இருந்து ஊருக்குத் திரும்பிய தந்தைக்கு, காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!


young girl-suside

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் மதுஸ்ரீ. 16 வயதான இவர் இடைநிலை முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மதுஸ்ரீயாய், அகில் ராஜேஷ் என்ற மாணவன் காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த மதுஸ்ரீ பெற்றோர் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் அகிலை  அழைத்த போலீசார் அவனுக்கு புத்திமதி கூறி எச்சரித்து அனுப்பியுள்ளனர். 18 வயதான சிறுவன் என்பதால் போலீஸ் அவனை தண்டிக்கவில்லை.

அதனையடுத்து மதுஸ்ரீ தனது பாட்டி வீட்டில் தங்க வைக்கப்பட்டார். ஆனால் போலீஸ் கூறியதையும்  மீறி மீண்டும் மதுஸ்ரீயை பின் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மது தனது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் வெளிநாட்டில் உள்ள அவளது தந்தைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் ஊருக்கு வந்த அவர் மகள் சடலத்தை பார்த்து கதறி அழுதார்.