இந்தியா

சிரித்த முகத்துடன் பேசி வீடியோ பதிவு செய்து, அடுத்த நொடியே ஆற்றில் குதித்த இளம்பெண்.! அதிர்ச்சி பின்னணி.!

Summary:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 23 வயதுடைய ஆயிஷா என்ற பெண் சபர்மதி ஆற்றிலிருந்து, தாம் அடுத்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 23 வயதுடைய ஆயிஷா என்ற பெண் சபர்மதி ஆற்றிலிருந்து, தாம் அடுத்த சில நிமிடங்களில் செய்யவிருக்கும் செயலுக்கு தாமே பொறுப்பு எனவும், இதில் யாருக்கும் தொடர்பு இல்லை என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அந்த காணொளியில், நான் அடுத்த சில நொடிகளில் செய்யும் செயலுக்கு நானே பொறுப்பு என்றும் இதில் எவருக்கும் தொடர்பு இல்லை. கடவுள் சிறிது காலமே உயிர் வாழ எனக்கு அனுமதி அளித்துள்ளார். என் கணவருக்கு சுதந்திரம் தேவைப்படுகிறது. எனவே அவருக்கு சுதந்திரம் அளிக்கபோகிறேன். நம் மீது யாரேனும் அன்பு கொள்ள வேண்டும் என்றால் நாமும் அவர்கள் மேல் அன்பு கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன்.

ஒருபக்கம் இருக்கும் அன்பால் எந்த பலனும் இல்லை. உங்களில் வேண்டுதல்களில் என்னையும் நினைவில் கொள்ளுங்கள். அல்லாவிடம் செல்கிறேன் என பேசிவிட்டு அந்த விடியோவை கணவனுக்கும் பகிர்ந்துவிட்டு ஆயிஷா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement