சொகுசு காரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு,,, சிக்கிய எம்.எல்.ஏ-வின் மகன்: அதிரும் அரசியல் வட்டாரம்..!

சொகுசு காரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு,,, சிக்கிய எம்.எல்.ஏ-வின் மகன்: அதிரும் அரசியல் வட்டாரம்..!


young girl raped in luxury car at hyderabad case mla son involved

தொலுங்கானாவில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள இருவர் அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தின் வாரிசுகள் என்பது தெரியவந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பென்ஸ் காருக்குள் வைத்து 17 வயது சிறுமியை 5 சிறுவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெலுங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 28 தேதியன்று 17 வயதான சிறுமி அங்குள்ள பஃப் ஒன்றில் நடந்த நிகழ்ச்சிக்கு  5 சிறுவர்களுடன் வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்து சிறுமியை வீட்டிற்கு கொண்டு சென்றுவிடுவதாக கூறி கூட வந்த 5 சிறுவர்கள் சிவப்பு நிற பென்ஸ் காரில் ஏற்றியுள்ளனர்.  

பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அந்த சிறுமியை காருக்குள்ளேயே கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பியுள்ளனர். கூடுதலாக கிடைத்துள்ள தகவலின்படி, குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பேரில் ஒருவர் எம்.எல்.ஏ ஒருவரின் மகன் என்பதும் மற்றொருவர் சிறுபான்மை கட்சி தலைவரின் மகன் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, சம்பவத்தன்று 5 சிறுவர்களுடன் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பேசி கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மது அருந்தாத பார்ட்டி என்றும், பார்ட்டியில் இருந்தவர்களுக்கு மதுபானம் வழங்கப்படவில்லை என்றும் பஃப் நிர்வாகம் காவல்துறையினரிடம்  தெரிவித்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. காவல்துறையினருக்கு  இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இந்த வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளன.