இந்தியா

சிறுநீர்கழிக்க சென்ற சிறுமியை, காருக்குள் வைத்து பலாத்காரம் செய்த கொடூரம்!.

Summary:

சிறுநீர்கழிக்க சென்ற சிறுமியை, காருக்குள் வைத்து பலாத்காரம் செய்த கொடூரம்!.


டெல்லியில் ஓடும் காரில் 14 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை காலை பொழுதில்14 வயது சிறுமி ஒருவர் காலை கடன் முடிக்க தனியாக நடந்து சென்றார்.

அப்போது சிறுமி அருகில் கார் ஒன்று வந்த நிலையில் அதிலிருந்து மூன்று பேர் சிறுமியை வலுக்கட்டாயமாக காருக்குள்ளே ஏற்றியுள்ளனர். பின்னர் காரை ஒருவர் ஓட்டிய நிலையில் மற்ற இருவர் சிறுமியை காருக்குள்ளே வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து ஒரு இடத்தில், அந்த கொடூரர்கள் சிறுமியை காரிலிருந்து கீழே விட்டு தப்பிசென்றுவிட்டனர். ம்பவத்துக்கு பிறகு அழுதுகொண்டே வீட்டுக்கு சென்ற சிறுமி நடந்ததை சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின்பேரில் சம்பவத்திற்கு தொடர்புடைய அஜய்சிங் மற்றும் சுரேந்தரா சிங் ஆகிய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒரு குற்றவாளியை போலீசார் தேடிவருகின்றனர்.


Advertisement