இந்தியா

திருமண நேரத்தில் மணமகன் ஓடியதால், மாமனாருடன் அரங்கேறிய திருமணம்!. இளம்பெண் அதிர்ச்சி!.

Summary:

திருமண நேரத்தில் மணமகன் ஓடியதால், மாமனாருடன் அரங்கேறிய திருமணம்!. இளம்பெண் அதிர்ச்சி!.

பீகார் மாநிலத்தின் சமஷ்டிபூரை சேர்ந்த ரோஷன் லால் என்பவரின் மகனுக்கும் சுவப்ணா என்ற பெண்ணுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.

இந்நிலையில் திருமண சமயத்தில் தான் காதலித்து வந்த பெண்ணுடன் மணமகன் ஓடிபோய்விட்டார். இதனால் திருமண வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் அடைந்தனர்.

இதையடுத்து தனது கெளரவம் கெட்டுவிடக்கூடாது என சுவப்ணாவின் தந்தை அதிர்ச்சி முடிவை எடுத்தார். இதனையடுத்து  தனது மகளை, அவரின் மாமனாரான ரோஷன் லாலுக்கு திருமணம் செய்துவைத்தார்.

மணப்பெண் சுவப்ணாவும் வேறு வழியின்றி தந்தையின் கெளரவத்திற்காக ரோஷனை திருமணம் செய்து கொண்டார்.


Advertisement