இந்தியா

22 வயதில் திருமணம்..! 23 வயதில் விவாகரத்து..! நள்ளிரவில் இளம் பெண்ணிற்கு நடந்த கொடூரம்..!

Summary:

Young girl killed who divorced her husband recently

கணவனை விவாகரத்து செய்த இளம் பெண் மர்மமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் இளம் பெண் பாரதி (23). இவருக்கும் சுராஜ் என்ற நபருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் இவர்களுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாரதி தனியாக வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பாரதி தனது தந்தை மற்றும் அத்தை வசித்துவந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பாரதியை சரமாரியாக வெட்டி கொன்றுள்ளனர். பாரதியின் அலறல் சத்தம் கேட்டு அவரது அத்தை கண்விழித்தபோது கத்தியை காட்டி அவரையும் மிரட்டியுள்ளனர்.

பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பித்துச்சென்றநிலையில் பாரதியின் அத்தை அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுக்க, பின்னர் போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து பாரதியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகள் குறித்து விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement