இந்தியா

திருமணத்திற்கு முன்பே கணவனை நச்சரித்த இளம் பெண்..! தனியே கூட்டி சென்று மணமகன் செய்த காரியம்.!

Summary:

Young girl killed by groom before 4 days of marriage

ஸ்கூட்டி வாங்கி தருமாறு கேட்டு தொல்லை செய்ததால் வருங்கால மனைவியை மணமகன் திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ரே பரேலி மாவட்டம் குர்பக்ஸ்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த சரிகா யாதவ் (20) என்ற இளம் பெண்ணிற்கும் மன்டோஷ் யாதவ் (24) என்ற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நான்கு நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், தனது அத்தை வீட்டில் இருந்து நர்சிங் படித்துவந்த சரிகா யாதவ் திருமணத்திற்காண ஆடை, ஆபகரணங்கள் வாங்குவதற்காக கடந்த 26 ஆம் தேதி அன்று மண்டோஷுடன் வெளியே சென்றுள்ளார். ஆனால் இரவு அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் சரிகாவின் உடல் அடுத்த நாள் பக்கத்துக்கு ஊரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மன்டேஸ்ஷை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ராதாபுர் பகுதியில் உள்ள ஆளில்லாத வீடு ஒன்றிற்கு சரிகாவை அழைத்து சென்று, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை மன்டேஸ் ஒப்புக்கொண்டார். பின்னர், தனது சகோதரனின் உதவியுடன் சரிகாவின் உடலை பக்கத்துக்கு ஊரில் தூக்கி வீசியதும் தெரியவந்தது.

கல்லூரிக்கு சென்று வர தனக்கு ஸ்கூட்டி வாங்கி தருமாறு சரிகா தன்னை தொல்லை செய்ததாகவும், சரிகாவுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக தான் சந்தேகித்ததால் அவரை கொலை செய்ததாகவும் மன்டேஸ் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement