இந்தியா

நள்ளிரவில் சிறுமியை பலவந்தமாக தூக்கிச் சென்று சீரழித்த இளைஞர்கள்! தடுக்க வந்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்!

Summary:

Young girl abused

ஓடிசாவில் தாயின் கண்முன்னே சிறுமி சீரழிக்கப்பட்டுள்ளார். அதைத் தடுக்க வந்த அந்த பெண்ணின் தாயையும் வெட்டி கொலை செய்துவிட்டு, சுமார் ஓரு மாத காலம் தலைமறைவாக இருந்த அந்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கடந்த மாதம் ஒரு சிறுமியும், தாயும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறுமியின் தாயார் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், விக்கி, பிஜயா என்ற இரண்டு இளைஞர்கள் சேர்ந்து தன்னை மலைப்பகுதிக்கு தூக்கிச்சென்று  பலவந்தமாக கற்பழித்ததாக சிறுமி கூறினார். இதனை தடுக்க வந்த தனது தாயை கத்தியால் தாக்கியதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் சிறுமி போலீசாரிடம் கூறினார். 

இந்தநிலையில் விக்கியை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த பிஜயாவை தேடி வந்தனர். அவனது செல்போன் சிக்னலை வைத்து தேடி வந்ததில் அவன் கேரளாவில் இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து ஓடிசா போலீசார், கேரளா சென்று பிஜயாவை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.


Advertisement