பாடி சோடா கெட்டப்பில் வந்த இளைஞன்! சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி. - TamilSpark
TamilSpark Logo
இந்தியா

பாடி சோடா கெட்டப்பில் வந்த இளைஞன்! சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் நவுஷாத். இவர் ஐக்கிய அரசு எமிரேட்சில் உள்ள ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கேரளாவில் உள்ள கொச்சிக்கு வந்துள்ளார். அவர் விமானத்தில் இருந்து இறங்கி, வெளியே வந்து கொண்டிருந்த போது அவரின் நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

அதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர். நான் சட்ட விரோதமாக எதையும் கடத்தி வரவில்லை என கூறியதும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை முழுமையாக சோதனை செய்தனர். 

அப்போது நவுஷாத் தலையில் சோதனை செய்த போது விக் எனப்படும் செயற்கை முடி வைத்திருப்பது தெரிய வந்தது. அதை விலக்கிய போது அந்த விக்கிற்குள் 1.13 கிலோ தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. தலையின் நடுப்பகுதியில் உள்ள முடியை மொட்டை அடித்துவிட்டு அதற்குள் தங்கத்தை மறைத்து வைத்து அதன் மேல் விக் வைத்து மறைத்து எடுத்து வந்ததை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.இதையடுத்து, நவுஷாத்திடம் விசாரணை நடந்து வருகிறது.

 

 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo