சென்னை அணியின் மோசமான ஆட்டம்! தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது!

தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவனைக் கைது செய்து, காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


young boy arrest for threats to ms dhoni daughter

2020 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. இந்த சீஸனின் முதல்போட்டியில் மும்பை கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. பின்னர், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது. இதனையடுத்து கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் மீண்டும் தோல்வியடைந்தது.

கடைசி ஆட்டத்தில் தோனியும் சரியாக விளையாடவில்லை. இந்தநிலையில், சமூக வலைதளங்களில் தோனியை கடுமையாக விமர்சித்து வந்தனர். ஒருகட்டத்தில் கோபம் அடைந்த ரசிகர் ஒருவர் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தோனியின் மகளுக்கு அநாகரிகமான மிரட்டல் விடுத்துள்ளான்.

Msd

இந்த நிலையில் தோனியின் ஐந்து வயது மகளுக்கு இன்ஸ்டாகிராமில் அநாகரிகமான முறையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கட்ச் பகுதியின் முந்த்ராவைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் தான் அந்தக் கருத்துகளை வெளியிட்டதாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக  போலீசார் தெரிவித்தனர்.