ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 18 இந்திய பெண்கள் மீட்பு? வைரல் வீடியோவின் உண்மை என்ன?.!



yezidi-women-rescued-video-trending-now-creating-social

 

கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிரியா நாட்டின் இராணுவம் மற்றும் ஐ.நா குழுவினர் சேர்த்து ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளின் முகாமை கண்டறிந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டு, அவர்களால் பிணையக்கைதியாக வைக்கப்பட்டு இருந்த யேசிடி பெண்கள் 18 பேர் மீட்கப்பட்டனர்.

இந்த விவகாரம் 2022 காலத்தில் மிகப்பெரிய விஷயமாக கவனிக்கப்பட்டது. மேலும், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட பெண்கள், அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த நிலையில், தற்போது இந்த வீடியோ மற்றொரு பெயரில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: "சிறுநீர் கற்களை கரைக்க தினமும் 2 லிட்டர் சிறுநீர் அருந்துங்கள்" AI பதிலால் இணையத்தில் பரபரப்பு.!?

தவறான தகவல் வைரல், உண்மையை அறிந்துகொள்ளுங்கள்

அதாவது, இந்தியாவை சேர்ந்த 18 பெண்களை ஐஎஸ் பயங்கரவாதிகள் கடத்திச்சென்றதாகவும், அவர்களை பாலியல் ரீதியாக துன்பறுத்தி அடிமையாக வைத்துள்ளதாகவும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் உள்ள கூற்றுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்பது நமது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

2022ல் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை உண்டாக்க வேண்டும் என்ற பெயரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: காதலுக்கு கண்ணில்லை.. 80 வயது முதியவரை கரம்பிடித்த இளம் பெண்!