இந்தியா

பாதிப்பு குறைந்தாலும் உயரும் பலி எண்ணிக்கை; தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா.!

Summary:

Yesterdays corona states in tamilnadu

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் தீவிரமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த இரு தினங்களாக சற்று சரிவைச் சந்தித்தாலும் பலி எண்ணிக்கை மிக அதிகமாகியுள்ளது. தமிழகத்தில், இன்று ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,39,978 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நேற்று மட்டும் 1,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,767 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 97 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இது தமிழகத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பலி எண்ணிக்கையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,295 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Advertisement