இந்தியா

20 வருடங்களுக்குப்பின் அதே இடத்தில் மீண்டும் கிடைத்த பொருள்..! அப்போது வெறும் 500 ரூபாய்.! இப்போ அதன் மதிப்பு என்ன தெரியுமா.?

Summary:

Women lost 8 gram gold 20 years before and found it now

கேரளத்தின் காசர்கோடி மாவட்டத்தின் எடம்பூரடி பகுதியைச் சேர்ந்தவர் நாராயணி. இவரது தோடு(காதணி) ஒன்று  கடந்த 2000வது ஆண்டில் ஒரு வயல்வெளியில் காணாமல் போனது. அவரும் அதை பலமுறை அங்கு தேடியும் அந்த தோடு கிடைக்கவில்லை. இப்படியே 20 ஆண்டுகள் கடந்துவிட்டநிலையில் தற்போது அந்த தோடு மீண்டும் கிடைத்துள்ளது.

நேற்று முன் தினம் அந்தப்பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்கள் பணிசெய்து கொண்டு இருந்தனர். அப்போது பேபி என்னும் பெண்மணி வயலில் தங்கம் போல் ஏதோ மின்னுவதைப் பார்த்து எடுத்துள்ளார். அதன்பிறகுதான் தெரியவந்துள்ளது அது 20 ஆண்டுகளுக்கு முன் நாராயணி தொலைத்த தோடு என்பது.

தற்போது அந்த காதணி நாராயணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு பவுன் மதிப்புள்ள இதை அந்த காலத்தில் 500 ரூபாய்க்குத்தான் வாங்கினாராம் நாராயணி. அதன் இப்போதைய சந்தை மதிப்பு 40 ஆயிரம் ரூபாய்.


Advertisement