இந்தியா

30 வயது பெண்ணின் உடலில் சுரந்த ஆணின் விந்தணுக்கள்..! 10 வருசமா குழந்தை இல்லை..! சோதனை செய்தபோது மருத்துவர்கள் கண்டறிந்த ஆச்சரியம்..!

Summary:

Women identified as men after 30 years who married a man

திருமணம் முடிந்து பல வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்த பெண் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்றபோது அவர் பெண் அல்ல, ஒரு ஆண் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா பீர்பும் பகுதியில் வசித்துவரும் 30 வயதான பெண் ஒருவர் கடுமையான வயிற்றுவலி காரணமாக நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அவரை சோதனை செய்தபோது ​​அவர் டெஸ்டிகுலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

சிகிச்சையின் போது அந்த பெண்ணை சோதனை செய்ததில், உன்மையில் அவர் ஒரு பெண் அல்ல என்றும் அவர் ஒரு ஆண் என்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். 30 வயதாகவும் அந்த நபருக்கு பெண்களை போலவே வளர்ந்த மார்பகங்கள், குரல், பெண்ணுறுப்பு போன்றவை இருந்துள்ளது.

ஆனால் அவரின் வயிறில் கர்ப்பப்பை இல்லை, பெண்களுக்கான மாதவிடாயும் அவருக்கு ஏற்படவில்லை. அதேநேரம் ஆண்களுக்கு உண்டான விந்தணு அவரது உடலில் இருந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், இந்த அரிதான நிலை சுமார் 22,000 பேர் ஒருவருக்கு காணப்படும் எனவும், அவரது உடலில் பெண்ணுறுப்பு இருந்தாலும், அது ஒரு குருட்டு யோனி ஆகும். அவரது குரோமோசோம் மாற்றங்களால் இந்த பிரச்சனை எழுந்துள்ளது என கூறியுள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் ஒரு நபருடன் திருமணம் முடிந்த நிலையில் இத்தம்பதிகள் குழந்தைகளுக்காக பல முறை முயற்சித்தும்  தோல்வியடைந்தது தெரியவந்துள்ளது.


Advertisement