
உத்திர பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம், படான் மாவட்டத்தில் கோயிலுக்கு சென்று வருவதாக கூறி ஒரு இளம்பெண் சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அந்த இளம்பெண்ணின் பெற்றோர்கள் அந்த பெண்ணை தேட ஆரம்பித்துள்ளனர். பல இடங்களில் தேடியும் அந்த பெண் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் தனது மகள் காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் அந்த பெண்ணை காரில் மர்மநபர்கள் அழைத்து வந்து கிராமத்தில் விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
ரத்த காயங்களுடன் வந்த அந்த இளம் பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில், அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடூரமாக வன்கொடுமை செய்ததும், மேலும் பெண்ணின் உடலில் பல இடங்களில் பலத்த காயம் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த குற்ற செயலில் ஈடுபட்ட கொடூர கயவர்களை போலீசார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement