ஒரு நொடி விட்ருந்தாலும் உயிரே போயிருக்கும்.!! ரயில் தண்டவாளத்தில் சிக்கிய பெண்.. ஓடிச்சென்று காப்பாற்றிய போலீஸ்காரர்..

ஒரு நொடி விட்ருந்தாலும் உயிரே போயிருக்கும்.!! ரயில் தண்டவாளத்தில் சிக்கிய பெண்.. ஓடிச்சென்று காப்பாற்றிய போலீஸ்காரர்..


women-escaped-from-major-train-accident-viral-video

ரயிலில் சிக்கி உயிரிழக்க இருந்த பெண்ணை ரயில்வே போலீஸ்காரர் ஓடிச்சென்று காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

குறிப்பிட்ட சம்பவமானது நவம்பர் 29ம் தேதியன்று மேற்குவங்க மாநிலம் புருலியா ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. ரயில் நிலையம் வந்தடைந்த சந்த்ராகச்சி - ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளது.

ரயில் புறப்பட்டு சென்றுகொண்டிருக்கும்நிலையில், ஆண்கள் சிலர் ஓடும் ரயிலில் ஏற முயற்சிக்கின்றனர். அப்போது பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிக்கிறார். அவரை தொடர்ந்து மற்றொரு பெண்ணும் கீழே குதிக்கிறார். முதலில் குதித்த பெண் எந்த ஒரு ஆபத்தும் இன்று தப்பிக்கிறார்.

ஆனால் இரண்டாவதாக குதித்த பெண் ரயில் ஓடும் திசைக்கு எதிர் திசையில் குதித்த நிலையில், சட்டென அவர் ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே இருந்த இடைவெளியில் சிக்கினார். ரயில் செல்லும் வேகத்தில் இழுக்கப்பட்டு தண்டவாளத்திற்குள் சென்றிருக்க வேண்டிய அப்பெண்ணை அங்கிருந்த ரயில்வேபாதுகாப்பு படை வீரர் பப்லு குமார் வேகமாக ஓடிச்சென்று மீட்டார்.

சில வினாடி விட்டிருந்தாலும்கூட அந்த பெண் ரயிலில் சிக்கி துண்டுதுண்டாகி உயிரிழந்திற்கு கூடும். அதிர்ஷ்டவசமாக அந்த பெண் உயிர் தப்பியுள்ளார். இதனிடையே பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆர்.பி.எஃப் வீரர் பப்லுவை ரயில்நிலையத்தில் இருந்த பயணிகளும், சக அதிகாரிகளும் பாராட்டினர்.