இந்தியா

நடக்கும்போதே வெளியே வந்த குழந்தை.! நடுரோட்டில் பிரசவம்.! பிரசவத்திற்கு பின் 150 கிமீ நடைபயணம்.!

Summary:

Women deliver baby on road and walk 150 KM with baby

சொந்த ஊருக்கு நடந்துசென்றபோது சாலையில் குழந்தை பெற்ற பெண், குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் மீண்டும் 150 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட தொழிலார்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் சம்பவங்கள் நடந்துவருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிராவில் தனது கர்ப்பிணி மனைவியுடன் வசித்துவந்த கூலி தொழிலாளி ஒருவர் மத்திய பிரதேசத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு நடந்தே செல்லே முடிவெடுத்துள்ளார்.

அதன்படி இருவரும் இரவும் பகலுமாக நடைப்பயணத்தை மேற்கொண்டனர். பாதி தூரம் சென்றுகொண்டிருக்கும்போதே அவரது மனைவிக்கு பிரசவவலி ஏற்பட்டு, சாலையிலையே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல், குழந்தை பிறந்ததும் சில மணி நேரம் மட்டுமே ஓய்வு எடுத்துவிட்டு பச்சிளம் குழந்தையுடன் மீண்டும் 150 கிலோ மீட்டர் தூரம் நடக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த தகவல் அந்த பகுதி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரியவரவே, பேருந்து மூலம் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது,


Advertisement