இந்தியா

டப்புனு நாக்கை வெட்டி பட்டுனு சாமி முன் தூக்கி வீசிய பெண்..! இப்படி ஒரு மாமியாரா.? பரபரப்பு சம்பவம்.!

Summary:

Women cut tongue in front of god to return his missed daughter in law

காணாமல் போன தனது மருமகள் மீண்டும் கிடைக்கவேண்டும் என்பதற்காக மாமியார் ஒருவர் நாக்கை வெட்டி சாமிக்கு காணிக்கையாக படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் லட்சுமி நிரலா. வீடுகளில் வீடு வேலை பார்த்து பிழைப்பு நடத்திவந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நிரலாவின் மருமகள் ஜோதி என்பவர் அவரது குழந்தையுடன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் தனது மருமகள் மற்றும் பேர குழந்தையை நிரலா பல இடங்களில் தேடியுள்ளார்.

நிரலாவின் கணவர் மற்றும் மகனும் பல இடங்களில் தேடியும் ஜோதி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் நிரலாவின் குடும்பத்தினர் ஜோதி காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசாரும் காணாமல் போன ஜோதி மற்றும் அவரது குழந்தையை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மருமகள் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த நிரலா சமீபத்தில் சாமி முன் நின்று தனது நாக்கை அறுத்துக்கொண்டார். நாக்கை அறுத்து சாமிக்கு காணிக்கையாக கொடுத்தால் காணாமல் போன மருமகள் மீண்டும் கிடைத்துவிடுவார் என யாரோ ஒருவர் கூற, அதை கேட்டு நிரலா இப்படி செய்ததாக நிரலாவின் கணவர் கூறியுள்ளார்.

நாக்கை அறுத்துக்கொண்ட நிரலா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது அவர் நலமாக இருந்தாலும் இனி அவரால் பேச முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement