துண்டான பிறப்புறுப்பு.. பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரின் பிறப்புறுப்பை அரிவாளால் வெட்டிய பெண்!



Women cut man private part who tries to abuse her

பாலியல் பலாத்காரம் செய்ய மூன்ற நபரின் பிறப்புறுப்பை பெண் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் உள்ள உமரிஹா என்ற பகுதியை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் தனது கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டநிலையில் தனது 13 வயது மகனுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் மர்மநபர் ஒருவர் அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.

வீட்டிற்குள் புகுந்த நபர், வீட்டில் இருக்கும் பொருட்களை திருடத்தான் வந்திருப்பதாக அந்த பெண் முதலில் நினைத்துள்ளார். இதனால் தனது 13 வயது மகனை வெளியே அனுப்பி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூடிவருமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுவனும் வெளியே சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்த மர்மநபர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அந்த மர்மநபருடன் நீண்ட நேரமாக போராடியநிலையில், ஒருகட்டத்தில் அந்த பெண் கட்டிலின் கீழ் இருந்த அரிவாளை எடுத்து அந்த நபரின் பிறப்புறுப்பை தனது சுயபாதுகாப்புக்காக வெட்டியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்று அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த பெண் கொடுத்த புகாரை அடுத்து அவரது வீட்டிற்கு வந்த போலீசார் அங்கு வலியால் துடித்துக்கொண்டிருந்த நபரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் அந்த நபர் அந்த பெண் மீது புகார் கொடுத்துள்ளதால் இரண்டு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.