இந்தியா

பாவம் அந்த வாட்ச்மேன்..! காரை தடுத்து நிறுத்தியதால் செருப்பால் அடித்த பெண்.! பகீர் சிசிடிவி காட்சிகள்.!

Summary:

Women beat security by sandals viral video

அனுமதியின்றி உள்ளே வந்த கார் ஒன்றினை தடுத்து நிறுத்திய காவலாளி ஒருவரை காரில் வந்த பெண் ஒருவர் செருப்பால் அடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ஹைதராபாத்தின் சந்தன நகர் பகுதியில் அமைந்துள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றுக்குள் கார் ஒன்று அனுமதி இன்றி உள்ளே நுழைய முயன்றுள்ளது. அப்போது கேட்டின் முன் நின்று கொண்டிருந்த காவலாளி உள்ளே வந்த காரை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் காரில் இருந்த இரண்டு பெண்கள் காவலாளி உடன் கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது காரில் இருந்து இறங்கி வந்த ஒரு பெண், தனது செருப்பை கழட்டி காவலாளி யை சரமாரியாக அடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுள்ளார். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. 

இதனையடுத்து சம்பந்தப்பட்ட காவலாளி சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விரைவில் அந்த பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். காவலாளி ஒருவரை பெண் ஒருவர் செருப்பால் அடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.


Advertisement