இது பயணமா இல்ல பேய் பட காட்சியா! ரயிலில் நள்ளிரவு 2 மணிக்கு ஒட்டுமொத்த கோச்சிலும் ஒரே பெண்...! இந்திய ரயில்வேயில் இப்படி நடக்குமா? வைரலாகும் விசித்தி வீடியோ..!!!



woman-travels-alone-empty-train-coach-viral-video

இந்தியாவில் ரயில் பயணம் என்றாலே கூட்டம், பரபரப்பு, சத்தம் என நினைவுக்கு வரும். ஆனால் அதே ரயிலில் நள்ளிரவில் ஒரே ஒரு பெண் மட்டும் தனியாக பயணம் செய்த அனுபவம் தற்போது வைரல் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நள்ளிரவு நேரத்தில் அதிர்ச்சி

அடையாளம் தெரியாத அந்த பெண், இரவு 2 மணி அளவில் ரயிலில் பயணம் செய்தபோது, அவர் அமர்ந்திருந்த பெட்டி முழுவதும் காலியாக இருந்துள்ளது. பொதுவாக எப்போதும் பயணிகள் நிரம்பி வழியும் ரயில்களில் இது மிகவும் அபூர்வமான காட்சியாக பார்க்கப்படுகிறது.

மற்ற பெட்டிகளிலும் யாரும் இல்லை

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அருகிலிருந்த மற்ற பெட்டிகளுக்கும் சென்று பார்வையிட்டுள்ளார். ஆனால் அங்கும் ஒரு பயணி கூட இல்லாததை பார்த்து மேலும் ஆச்சரியமடைந்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் ஆள் நடமாட்டமே இல்லாத ரயில் சூழல், அந்த அனுபவத்தை திகில் அனுபவம் போல மாற்றியுள்ளது.

இதையும் படிங்க: அட... இப்படி ஆச்சே! கண்டாமிருகத்தை விடாமல் துரத்தி பின்தொடர்ந்த சிறுத்தை! வெளியேறிய வாயு.... அடுத்து நடந்ததை பாருங்க! வைரலாகும் வீடியோ..!!!

நெட்டிசன்களின் கலவையான கருத்துகள்

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இது உண்மையிலேயே பயணமா அல்லது பேய் படக் காட்சியா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் இதை ரயில்வே துறையின் அரிய ‘விஐபி’ அனுபவம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

அந்த பெண் தனது வியப்பையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில், இந்திய ரயில்களில் இப்படி ஒரு அபூர்வமான அனுபவம் நிகழ்வது அரிது என்பதால் இந்த சம்பவம் தொடர்ந்து பேசுபொருளாக மாறி வருகிறது.