ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற IT ஊழியர் பரிதாப பலி!
பெங்களூரில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற விப்ரோ நிறுவனத்தின் ஊழியர் கிரண் கால் தடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
நேற்று மாலை சென்னையிலிருந்து பெங்களூரு சென்ற சென்னை மெயில் ரயிலில் பயணம் செய்துள்ளார் 38 வயதான மென்பொருள் இன்ஞ்சினியர் கிரண். இவர் பெங்களூரில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் பணியற்றி வந்துள்ளார். மாலை 4:30 மணிக்கு ரயில் ஆர்.கே புரம் ரயில் நிலையத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்த போது இவர் இறங்க முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த கிரணிற்கு தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து ரயில்வே கவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வந்து பார்த்த போது ரயில் பிளாட்பார்மிலேயே கிரண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில் அந்த ரயில் அந்த ரயில் நிலையத்தில் எப்போதுமே நிற்காதாம். மக்கள் தண்டவாளத்தில் கடக்க நேரிடும் என்பதற்காக ரயில் ஓட்டுநர் ரயிலை மெதுவாக இயக்கியுள்ளார்.
இதனால் அருகில் இருக்கும் தனது இல்லத்திற்கு விரைவாக சென்றுவிடலாம் என்ற நோக்கத்தில் கிரண் அங்கு இறங்க முயன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் பணிபுரிந்து வந்த கிரண் சில நாட்களுக்கு முன்பு தான் பெங்களூரில் தங்கி பணியாற்றியுள்ளார். இவர் நெல்லூரில் வசிக்கும் தனது மனைவி மற்றும் 3 மாத குழந்தையை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு சென்று பெங்களூரு தரும்பும் போது தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.