வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய கணவன் திடீர் மாயம்! 7 மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த மனைவியின் கொடூரம்!

வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய கணவன் திடீர் மாயம்! 7 மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த மனைவியின் கொடூரம்!


Wife killed husband with her illegal lover

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குர்ஜித் சிங். இவரது மனைவி மன்ப்ரீத். குர்ஜித் சிங் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த அக்டோபர் மாதம் ஊருக்கு திரும்பியுள்ளார். ஆனால் அக்டோபர் மாதம் இறுதியிலிருந்து அவரை காணவில்லை மாயமானார்.

இந்நிலையில் இதுகுறித்து குர்ஜித் சிங்கின் சகோதரர் மன்பிரீத்திடம் கேட்டபோது, அவர் பக்கத்து ஊரில் ஒருவருக்கு கடன் கொடுத்து இருந்ததாகவும் அதனை வாங்கவே  சென்றுவிட்டார் எனவும் கூறியுள்ளார்.

Murder

ஆனால் சில மாதங்களாகியும் அவர் திரும்பவில்லை. மேலும் இதற்கிடையில் மன்பிரீத் வீட்டிற்கு அடிக்கடி நபர் ஒருவர் வந்து சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் குர்ஜித் சிங் காணாமல் போனது தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டநிலையில் அவரது சகோதரர் இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. 

குர்ஜித் சிங் வெளிநாட்டில் இருந்தபோது அவரது மனைவிக்கு ஹர்மன் என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊருக்கு திரும்பிய குர்ஜித்க்கு தெரியவந்த நிலையில் அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தங்களுக்கு இடையூறாக இருந்த கணவரை மன்ப்ரீத் மற்றும் அவரது காதலன் ஹர்மன் இருவரும் சேர்ந்து கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.