இந்தியா

இளைஞனுடன் 41 வயது பெண்ணுக்கு முறையற்ற பழக்கம்.! சிசிடிவி கேமராவில் சிக்கிய இளைஞர்.! பரிதாபமாக இறந்த கணவர்.!

Summary:

தெற்கு டெல்லி இராணுவ காலனி பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் பீம்ராஜ் என்பவர் சாலை

தெற்கு டெல்லி இராணுவ காலனி பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் பீம்ராஜ் என்பவர் சாலை ஓரமாக காரில் அமர்ந்து இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் திடீரென பீம்ராஜை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த இரு சக்கர வாகன பதிவு என்னை வைத்து விசாரணை செய்தபோது அந்த வாகனம் கமலாநகர் பகுதியை சேர்ந்த ஒருவரது என தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர் கோவிந்தபுரியை சேர்ந்த ரோகன் என்பவர் இரு சக்கர வாகனத்தை வாங்கி சென்றுள்ளார் என கூறியுள்ளார். இதனையடுத்து ரோகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சாலையில் வாகனம் ஓட்டிய போது ஏற்பட்ட மோதலில் பீம்ராஜை கொலை செய்ய முயற்சி செய்தாக ரோகன் தெரிவித்தார்.

இதனையடுத்து ரோகனின் செல்போன் அழைப்புகளை போலீசார் பரிசோதித்த போது பீம்ராஜ் மனைவியான 41 வயது பபிதா அடிக்கடி போன் செய்து இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பபிதாவுக்கும், ரோகனுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக முறையற்ற பழக்கம் இருப்பது தெரியவந்தது.

இது வெளியே தெரிந்ததால் பீம்ராஜ் தனது மனைவி பபிதாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து ரோகன் உதவியுடன் பீம்ராஜை தீர்த்துக்கட்ட பபிதா திட்டமிட்டுள்ளார். அதனால் தான் நாட்டுத்துப்பாக்கி வாங்கி பீம்ராஜ்மீது ரோகன் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து பபிதா மற்றும் ரோகனை போலீசார் கைது செய்தனர்.


Advertisement