புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
குடும்ப சண்டையில் கடுப்பேற்றிய கணவன்.. "ஒரே மிதி" போட்டுத் தள்ளிய மனைவி..!
குடும்பத்தகராறில் கோபமுற்று கணவனை, மனைவியே கொலை செய்த பேரதிர்ச்சி சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு, பேடரஹள்ளி அருகாமையில் ஆந்திரஹள்ளி, சாய்பாபா லே-அவுட்டில் வசித்து வந்தவர் உமேஷ் (வயது 52). இவர் வீட்டிலேயே வட்டிக்கு விட்டு பணம் பெருக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி வரலட்சுமி.
இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு, அடிக்கடி இவர்களது வீட்டில் சண்டையும் சச்சரவுமாக சத்தம் கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக அவர்களுக்குள் மீண்டும் சண்டை வந்த நிலையில், கோபத்தின் உச்சிக்கு சென்ற மனைவி, கணவரை தனது காலால் வேகமாக எட்டி உதைத்துள்ளார்.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த உமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின் இறந்த கணவரின் உடலை வீட்டின் அருகாமையில் போட்டு, வேறு யாரோ கொலை செய்துவிட்டது போல அக்கம்பக்கத்தினரிடம் நாடகமாடியிருக்கிறார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், என்ன நடந்தது? என்று மனைவியை விசாரணை நடத்திய நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், இதன் காரணமாக கோபமுற்ற மனைவி கணவரை தாக்கிய கொலை செய்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும், வரலட்சுமியை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.