பெண்ணின் அழகில் மயங்கி இரண்டாவது திருமணம் செய்த நபர்! 15 நாளில் காத்திருந்த பேரதிர்ச்சி!

பெண்ணின் அழகில் மயங்கி இரண்டாவது திருமணம் செய்த நபர்! 15 நாளில் காத்திருந்த பேரதிர்ச்சி!


Wife escaped with money and jewels after 15 days of marriage

திருமணமான 15 நாட்களில் மனைவி கணவனை ஏமாற்றிவிட்டு ஒட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சுரேந்தர். ஏற்கனவே திருமணமான சுரேந்தர் அவரது மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

இந்நிலையில் தாங்கள் திருமணம் ப்ரோக்கர்கள் என்று கூறி இருவர் சுரேந்தரிடம் அறிமுகமாகியுள்ளனர். மேலும், 28 வயதான அழகான இளம் பெண் ஒருவரின் புகைப்படத்தை காட்டி இவரை திருமணம் செய்துகொள்ள சம்மதமா என கேட்டுள்னனர்.

Crime

அந்த பெண்ணின் அழகில் மயங்கிய சுரேந்தர் உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்துவைக்க ப்ரோக்கர்களுக்கு ஒரு லட்சம் பணமும் கொடுத்துள்ளார் சுரேந்தர்.

இந்நிலையில் திருமணம் முடிந்து 15 நாட்கள் கழித்து உறவினர் வீட்டுக்கு செல்லவேண்டும் என மனைவி கூற ரயில் நிலையம் அழைத்து சென்றுள்ளார் சுரேந்தர். அங்கு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த மனைவி திடீரென மாயமாகியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுரேந்தர் திருமணம் செய்துவைத்த ப்ரோக்கர்களிடம் கேட்டபோது அவர்கள் சுரேந்தரை மிரட்டியுள்ளனனர். பின்னர்தான் தெரிந்தது தான் ஏமாற்றப்பட்டது. மேலும், அந்த பெண் சுரேந்தர் வீட்டில் இருந்த பணம், நகைகளை எடுத்து சென்றுவிட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் சுரேந்தர்.