இந்தியா

மனைவி, மகளை பார்க்கவேண்டுமென ஆசையோடு இருந்த வெளிநாட்டு கணவர்! பேரிடியாக வந்த அதிர்ச்சி செய்தி!

Summary:

wife dead in pneumonia at kerala husband return from kerala

கேரளா திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பிரசாந்தன் பிரபாகரன் நாயர். 48 வயது நிறைந்த அவர் துபாயில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மினி. இவர்களுக்கு சோனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் பிரபாகரனின் மனைவி மினிக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மினி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து துபாயில் உள்ள பிரசாந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் அங்கு கதறி துடித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து துபாயில் உள்ள சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான ஹாஷிக் என்பவர் கூறுகையில், மனைவி மினி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பிரசாந்தனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதத்தில்தான் அவர் மனைவி மற்றும் மகளை போய் பார்க்க திட்டமிட்டிருந்தார். அதற்குள் இப்படி ஆகிவிட்டது என வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் சனிக்கிழமை திருவனந்தபுரத்துக்கு செல்லும் விமானத்தில் பிரசாந்தன் நாடு திரும்பி அவரது மனைவியின் இறுதி சடங்குகளை மேற்கொள்ளவுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்


Advertisement