சினிமாவை மிஞ்சிய உண்மை திகில் சம்பவம்! காதலர்தினத்தன்று கணவரை 8 துண்டுகளாக வெட்டி புதைத்த மனைவி!

சினிமாவை மிஞ்சிய உண்மை திகில் சம்பவம்! காதலர்தினத்தன்று கணவரை 8 துண்டுகளாக வெட்டி புதைத்த மனைவி!


Wife cute husband 8 pieces and burried

டெல்லியில் கடந்த மாதம் காதலர் தினத்தன்று, தன் கணவரை 8 துண்டுகளாக வெட்டி கொலை செய்து வெவ்வேறு இடத்தில் புதைத்துள்ள திகில் சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

டெல்லி அம்ரித் விகார் பகுதியில் ராஜேஷ்(63), சுனிதா(38) தம்பதியினர் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுனிதா கடந்த மாதம் காதல் தினம் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு தனது கணவரை காணவில்லை என்று போலிசில் புகார் கொடுத்துள்ளார். 

அதன்பின், வீட்டை காலிசெய்து விட்டு தன் மகனை கூட்டிக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார் சுனிதா. அதனைத் தொடர்ந்து ஒரு மாதம் கழித்து இரண்டு நாட்களுக்கு முன்பு, வீட்டு உரிமையாளர் சுனிதா தங்கியிருந்த வீட்டை சுத்தம்செய்துள்ளார். அப்போது அவருக்கு மிக்ப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 

வீட்டின் தரையின் ஒரு மனிதரின் கை மட்டும் புதைக்கப்பட்டு விரல் வெளியே தெரிந்துள்ளது. பின்னர் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடரந்து சுனிதா தனது கணவர் காணாமல் போனது குறித்து அளித்த புகாரை நினைவுகூரந்த போலிசார், சுனிதாவை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

போலிசாரின் விசாரணையில், சுனிதா தனது கணவரை 8 துண்டுகளாக வெட்டி, கைப் பகுதியை வீட்டிலே புதைத்துவிட்டு மற்ற உடல் பாகங்களை ஆங்காங்கே வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறிய காரங்களும், கொலை செய்த விதமும் போலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சுனிதாவின் கணவர் ராஜேஷ், சுனிதாவிற்கு வேறொரு இளைஞருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு பலமுறை சண்டையிட்டுள்ளார். இதனால் நீண்ட நாட்களாகவே அவர்களது வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் இருந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து ராஜேஷை தீர்த்துகட்ட சுனிதா முடிவு செய்துள்ளார். போலிசிடம் சிக்காமல் எப்படி கொலை செய்வது என்பதை அறிந்து கொள்ள பல்வேறு க்ரைம் படங்களை பார்த்துள்ளார் சுனிதா. பின்னர் தனக்குள் தைரியத்தை வளர்த்துகொண்ட சுனிதா கணவனை கொலை செய்ய காதலர் தினத்தை தேர்வு செயாதுள்ளார். 

அன்று மாலை தனது மகனை பக்கத்து வீட்டிற்கு அனுப்பி தாமதமாக வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். பின்னர் வீட்டில் இருந்த தனது கணவருக்கு ஜுசில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கமடைந்த ராஜேஷை 8 துண்டுகளாக வெட்டியுள்ளார் சுனிதா. 

உடலின் கை பாகங்களை வீட்டின் தரையிலே குழிதோண்டி புதைத்த அவர், மீத பாகங்களை சூட்கேசில் அடைத்து பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளார். இந்த விசாரணைக்கு பின் போலிசார் ராஜேஷின் உடல் பாகங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் சுனிதாவை திகார் சிறையில் அடைத்து மகனை குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.