
மும்தாஜ் மீது கொண்ட காதலால் தாஜ்மஹாலை கட்டினார் ஷாஜஹான். இந்நிலையில் ஒரு பெண் தன் கணவருக்க
மும்தாஜ் மீது கொண்ட காதலால் தாஜ்மஹாலை கட்டினார் ஷாஜஹான். இந்நிலையில் ஒரு பெண் தன் கணவருக்கு கோயில் கட்டி அவரது உருவச் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டு வருகின்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு கணவன் உயிருடன் இருக்கும் பொழுதே மதிக்காத பெண்கள் மத்தியில் இப்படி ஒரு மனைவியா என்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அங்கி ரெட்டி-பத்மாவதி தம்பதி. விவசாய தொழில் செய்து வந்த அங்கி ரெட்டி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் எப்பொழுதும் கணவனின் நினைவில் வாழ்ந்து கொண்டிருந்த பத்மாவின் கனவில் தனக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று கணவர் சொன்னதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பத்மாவதி மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து சேமிப்பு பணத்தை வைத்து கோவில் கட்டியுள்ளனர். தினமும் பத்மாவதி கணவரின் சிலைக்கு பூஜை, பூ போன்றவை செலுத்தி கணவனே கண்கண்ட தெய்வமாய் வணங்கி வருகிறார். மேலும் தனது கணவரின் பிறந்தநாள் மற்றும் பெளர்ணமி நாட்களில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார் பத்மாவதி. கணவருக்காக மனைவி கோவில் கட்டி பூஜை செய்துவரும் மனைவியின் செயல் பலரால் பாராட்டப்பட்டு வருகின்றது.
Advertisement
Advertisement