பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படுகிறது.? விளக்கம் கொடுத்த மத்திய அரசு.!

பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படுகிறது.? விளக்கம் கொடுத்த மத்திய அரசு.!


whwn-school-and-college-openedd

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவந்த நிலையில், மத்திய அரசு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிட்டது. இந்தநிலையில், கடந்த மாதம் 24-ந் தேதி நள்ளிரவில் இருந்து ஊரடங்கு அமலுக்கு வந்ததால், பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.


21 நாள் ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி முடிவடைகிறது. ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது. இந்தநிலையில்,ஏப்ரல் 14-க்கு பிறகு, பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு நேற்று விளக்கம் அளித்தது.

shool

அதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு, மத்திய அரசுக்கு மிகவும் முக்கியம். ஏப்ரல் 14-க்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. 14-ஆம் தேதியன்று கொரோனா நிலவரத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பதா அல்லது மேலும் சில நாட்களுக்கு மூடுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் பின்பற்றி வரும் செயல் திட்டத்தை எனது அமைச்சகம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்துவது, விடைத்தாள்கள் திருத்துவது ஆகிய பணிகளுக்கான திட்டம் தயாராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.