மனைவியின் கிட்னியை விற்று, 2-ம் திருமணம் செய்து உல்லாச வாழ்க்கை : குழந்தைத்தனமான நம்பிக்கைக்கு துரோகம் இழைத்த கணவனின் பயங்கரம்.!

மனைவியின் கிட்னியை விற்று, 2-ம் திருமணம் செய்து உல்லாச வாழ்க்கை : குழந்தைத்தனமான நம்பிக்கைக்கு துரோகம் இழைத்த கணவனின் பயங்கரம்.!


West Bengal Husband Cheats Wife Sell Kidney

பணப்பற்றாக்குறை என்று கூறி வயிற்று வலியால் துடித்த மனைவியின் கிட்னியை விற்பனை செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கணவனின் பகீர் செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

வங்கதேச சட்டவிரோத அகதியான பிரசாந்த் (வயது 34), கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசாவில் மல்காங்கிரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அங்கு ரஞ்சிதா என்ற பெண்ணை காதலித்து கரம்பிடித்துள்ளார். தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், ரஞ்சிதாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

அவர் மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்கையில் ரஞ்சிதாவின் கிட்னி மாமாயகியுள்ளது அம்பலமானது. அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்துள்ளார். அது கணவரின் கட்டாயத்தின் பேரில் நடைபெற்றுள்ளது. இதனால் கிட்னி திருடப்பட்டு இருக்கலாம் என ரஞ்சிதா சந்தேகித்துள்ளார்.

west bengal

இதுகுறித்து கணவரிடம் கேட்கையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். பணப்பற்றாக்குறையை சமாளிக்க மனைவியின் வயிற்று வலியை உபயோகம் செய்த பிரசாந்த், ரஞ்சிதாவின் கிட்னியை விற்பனை செய்ய பேரம் பேசியுள்ளார். கணவரின் மீதுள்ள நம்பிக்கையால் வயிற்று வலி சரியாக அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.

கிட்னி விற்பனை செய்த பணத்தை வாங்கிய பிரசாந்தோ, இரண்டாவதாக பெண்ணை திருமணம் செய்து உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த விஷயங்களை அறிந்த ரஞ்சிதா கணவரை கைது செய்யக்கூறி காவல் நிலயத்திலி புகார் ளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர் பெங்களூரில் இருக்கும் பிரசாந்தை கைது செய்தனர்.