பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்; சோளக்காட்டில் உடல்.. அதிரவைக்கும் சமபவம்.!West Bengal Girl Rape Murder 

 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் போன்ற பிரச்சனைகளை குறைக்க சட்டங்கள் கடுமையாக வேண்டும், பெண்கள் குறித்த விழிப்புணர்வும் அதிகம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள மடலா மாவட்டம், மோட்டாபுரி பகுதியில் சோளக்காட்டில் இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெண் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

பெண் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர், கொலை செய்யப்பட்டு உடல் சோளக்காட்டில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்தது யார்? என தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது. 

இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.