இந்தியா

நமக்கு சோறு தான் முக்கியம்...பத்தி எரியும் திருமண மண்டபம் கூலாக பந்தியில் சாப்பிடும் நபர்..வைரலாகும் வீடியோ!!

Summary:

நமக்கு சோறு தான் முக்கியம்...பத்தி எரியும் திருமண மண்டபம் கூலாக பந்தியில் சாப்பிடும் நபர்..வைரலாகும் வீடியோ!!

திருமண மண்பவம் தீப்பிடித்து எரிவதைக்கூட பொருட்படுத்தாமல் கூலாக உட்காந்து சோறு தான் முக்கியம் என்பதை போல சாப்பிடும் நபர் ஒருவரின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மஹாராஷ்டிராவின் தானேவில் உள்ள பிவாண்டியில் உள்ள திருமணம் மண்டபவம் தீப்பிடித்து எரிந்துள்ளது.அப்போது எதிர்பாதவிதமாக வெட்டிங் பந்தல் தீப்பிடித்து எரிந்துள்ளது.உடனே பந்தியில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு பார்த்துள்ளனர்.

ஆனால் பந்தியில் சாப்பிட்டு கொண்டிருந்த இரண்டு நபர்கள் அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்தாலும், சத்தத்தை பொருட்படுத்தாமல் சோறு தான் முக்கியம் என்பதை போல திரும்பி நாற்காலிகளில் அமர்ந்து நெருப்பைப் பார்க்கிறார்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருகின்றனர்.


Advertisement