பூமியில் புதைக்கப்பட்ட தண்ணீர் குழாய் திடீரென வெடித்தது..! நொடிப்பொழுதில் தப்பிய கார்..! வைரல் வீடியோ காட்சி.!

பூமியில் புதைக்கப்பட்ட தண்ணீர் குழாய் திடீரென வெடித்தது..! நொடிப்பொழுதில் தப்பிய கார்..! வைரல் வீடியோ காட்சி.!


Water pipe blast in Rajastan viral video

ராஜஸ்தான் மாநிலத்தில் தரையில் புதைக்கப்பட்டிருந்த தண்ணீர்குழாய் திடீரென வெடித்ததில் தண்ணீர் ஆறுபோல் சாலையில் ஓடியதும், குழாய் வெடித்தபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று அதிர்ஷ்டவசமாக தப்பிய காட்சியும் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பழமையான தண்ணீர் குழாய் ஒன்று உள்ளது. இந்த குழாய் கடந்த சனிக்கிழமை அன்று திடீரென வெடித்துள்ளது. இந்த திடீர் விபத்தில் சாலையில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக்கொண்டு வெளியேறியது.

Dvya_RA_ThORe என்ற ட்விட்டர் பயனர் குழாய் வெடிக்கும் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த காட்சியில், குழாய் வெடிகும்நிலையில் அந்த வழியாக கார் ஒன்று வந்துகொண்டிருக்கிறது. கார் அருகில் வரும் சில நிமிடங்களுக்கு முன் தண்ணீர்குழாய் திடீரெனெ வெடிக்கிறது. இதில் கார் மற்றும் காரில் இருந்தவர்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பியுள்ளனர்.

மேலும் குழாய் வெடித்த சில நிமிடங்களில் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் ஆறுபோல் ஓடியதில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.