எச்சரிக்கை!! வீட்டில் செல்ல பிராணிகள் வைத்திருப்போர் ஜாக்கிரதை.. நிபா வைரஸை தொடர்ந்து ப்ரூசெல்லோசிஸ் வைரஸ்.. !



warning-those-who-have-pets-at-home-beware-nipah-virus


 கேரளா மாநிலத்தில் நிபா வைரஸை தொடர்ந்து ப்ரூசெல்லோசிஸ் வைரஸ் பரவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வைரஸால் மரணம் ஏற்பட கூட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுவதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைதொடர்ந்து கேரளா மாநிலத்தில் வெம்பாயம் பகுதியை சேர்ந்த தந்தை, மகன் உடல் நல குறைவால் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டதாக சொல்லபடுகிறது. அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ப்ரூசெல்லோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர். 

Pets at home beware

மேலும் மருத்துவர் கூறுகையில் ப்ரூசெல்லோசிஸ் என்பது விலங்குகளிடம் இருந்து பரவக்கூடிய ஒரு வகை நோயாகும். எனவே செல்லப்பிராணிகளை வைத்து இருப்போர் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தற்போது கேரளா மாநில சுகாதார துறை தந்தை, மகன் இருவருமே உடல் சுகத்தோடு இருக்கின்றனர் என்றும் விரைவில் குணம் அடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தலைவலி, சாப்பிடுவதில் சிரமம், காய்ச்சல், தசைப்பிடிப்பு, வலிப்பு ஆகியவை  ப்ரூசெல்லோசிஸ் நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய் பிரானிகளிடமிருந்து பரவுவதால் செல்ல பிரானிகளிடம் இருந்து சற்று தள்ளியே இருப்பது நல்லது என்று அறிவுறுத்தி உள்ளனர்.