பார்க்கும்போதே நமக்கு பதறுது!! பாம்பை மூக்குவழியாக விட்டு, வாய் வழியாக எடுக்கும் நபர்!! வைரல் வீடியோ காட்சி..



Viral video of man inserting snake into his nose

நபர் ஒருவர் குட்டி பாம்பு ஒன்றை மூக்கு வழியாக உள்ளே விட்டு, வாய் வழியாக வெளியே எடுக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக பாம்பு என்றால் அனைவர்க்கும் பயம் ஏற்படும். பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். எவ்வளவு பெரிய தைரியசாலியாக இருந்தாலும் பாம்பை பார்த்து பயப்படுவது வழக்கம். ஆனால் இந்த வீடியோவில் நபர் ஒருவர் பாம்பை வைத்து செய்யும் செயல் பார்ப்போரை மிரளவைத்துள்ளது.

பிரபல நடிகர் வித்யூத் ஜமால் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு ஒன்றில்பதிவில், வயதான நபர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்தவாறு உயிருடன் உள்ள பாம்பை தனது மூக்கு வழியாக உள்ளே விட்டு, அதனை தனது வாய் வழியாக வெளியே எடுக்கிறார். பார்க்கும்போதே நமக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் கடும் வைரலாகிவருகிறது.

வீடியோவை பார்த்த பலரும் வாவ், சூப்பர் என கமெண்ட் செய்துவந்தாலும், அந்த பாம்பு என்ன பாவம் செய்தது என்றும், அவர் அந்த பாம்பை கொடுமை படுத்துகிறார் எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர். அந்த காட்சியை நீங்களே பாருங்கள்.