கிகி சேலஞ்ச் போயாச்சு.! இது என்ன புதுசா நில்லு நில்லு சேலஞ்ச்? இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்பால் கடுப்பாகும் காவல்துறை.!viral nillu nillu challenge in kerala

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ் பக்கெட் மற்றும் கிகி சேலஞ்ச் போன்றவை சமூகவலைத்தளங்களில் பரவி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது 'நில்லு நில்லு சேலஞ்ச்' என்ற ஆபத்தான சேலஞ்ச் மிக வேகமாக பரவி வருகிறது. 

இந்த சேலஞ்சில் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி அல்லது கையில் காய்ந்த இலை மற்றும் குச்சிகளை பிடித்தபடி சாலையில் செல்லும் வாகனங்களை திடீரென வழி மறித்து, நடனமாடுவது தான் இந்த ‘நில்லு நில்லு சேலஞ்ச்'. இளைஞர்கள் பலரும் சவாலை செய்து டிக்டாக் செயலியில் பதிவிட்டுள்ளனர். 

கடந்த 2004ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘ரெயின் ரெயின் கம் ஏகெயின்' என்ற படத்தில் "நில்லு நில்லு" என்ற பாடல் பிரபலமானது. மேலும் அந்த பாடலில்  நட்டநடு சாலையில் கல்லூரி வகுப்புகள் நடத்துவது, மாணவர்கள் ஆடுவது என பல வேடிக்கையான விஷயங்கள் இருக்கும். தற்போது இந்தப் பாடலைத் தான் சேலஞ்சாக மீண்டும் பிரபலமாக்கியுள்ளனர். 

இந்த 'நில்லு நில்லு சேலஞ்ச்' கேரளாவில் மிக வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களால் நடத்தப்படும் இந்த சேலஞ்சால் விபத்து ஏற்படும் ஆபத்து இருப்பதாக கேரள போலீசார் எச்சரித்துள்ளனர்.இதனை டிக் டாக் விடியோவாகவும் செய்து வருகின்றனர்.

மேலும் திடீரென நான்கு அல்லது ஐந்து இளைஞர்கள் ஓடும் வண்டியை நிறுத்துவதால் ஓட்டுனர்கள் நிலை தடுமாறி பெரும் சேரமத்திற்கு உள்ளாவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது